MADURAI JAIN HERITAGE CENTRE, MADURAI, TAMILNADU, PROLOGUE
வணக்கம்,
மதுரை சமண பண்பாட்டு மன்றம்,தொடர்ந்து மேலும் சிறப்பாக
பணியாற்றிடவும் பராமரிப்புக்காகவும், நிர்வாகிகள் கலந்து முடிவு எடுத்து, கார்பஸ் நிதி (நிரந்தர வைப்புத் தொகை
திட்டம் ஒன்றை) உருவாக்கியிருக்கிறோம், எங்கள் பணியை மேம்படுத்த விருப்பம் உள்ள அருளாளர்கள் தங்களால் முடிந்த
நன்கொடையை அளித்து ஆதரவு தர வேண்டுகிறோம்..,இது வரை 18 பேர் குறைந்த பட்சமாக தலா ரூ50,000/- நன்கொடை
அளித்துள்ளனர்,நன்கொடை அளித்தவர்களின் புகைப்படம் அல்லது கொடையாளர்கள்விருப்பபடும் முன்னோர்கள், அல்லது
தம்பதியினர் படங்கள் மன்றத்தின் முக்கிய பகுதியில் வைக்கபடுகிறது...இந்த அருட் பணியில் தாங்களும் இணைந்து
ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்....
தன் வாழ்நாள் முழுவதும் கொல்லாமை கொள்கையை முன்னிறுத்தி,
உயிர்பலியை தடை செய்யும் சட்ட முன்வடிவை ஏற்படுத்தி, சமண மக்களுக்காக வாழ்ந்து மறைந்த,குடியரசுத்
தலைவரிடமிருந்து உயரிய விருது பெற்ற.. ஜீவபந்து T S ஸ்ரீ பால் அவர்களின் 123 ஆவது பிறந்த தினமான இன்று, அவரது
கொள்கைகளையும்,தென்னகம் முழுவதும் அவர் சென்று பாதுகாத்த சமண திரு உருவங்கள், கல்வெட்டுகளையும்,தொடர்ந்து
பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல மதுரை சமணப் பண்பாட்டு மன்றம் பாடுபடுகிறது...அய்யாவை போற்றி இந் நன்நாளில்
வணங்குகிறோம்....
|